இளவரசி மெர்க்கலை போலவே அச்சு அசலாக மாறிய தீவிர ரசிகை: வியக்கவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் தீவிர ரசிகை ஒருவர் அவர் அணியும் உடைகளை போலவே தானும் அணிந்திருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அதிகளவு வெளியிட்டு வருகிறார்.

மெக்சிகோவை சேர்ந்த லிண்டா மெர்டினீஸ் (31), மெர்க்கல் பிரித்தானிய இளவரசி ஆவதற்கு முன்னால் இருந்தே அவரின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார்.

அதாவது பிரபல தொலைக்காட்சி தொடரான சூட்ஸில் மெர்க்கல் நடித்து கொண்டிருக்கும் போதிலிருந்தே அவர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக லிண்டா இருந்து வருகிறார்.

மெர்க்கலின் நடிப்புக்கு மட்டுமின்றி அவரின் இரக்கமான மனிதநேய குணத்துக்கும் லிண்டா தீவிர ரசிகை ஆவார்.

Image: MEGIADRUMWORLD & GETTY

மெர்க்கல் அணியும் உடைகளை போலவே அச்சு அசலாக இருக்கும் உடைகளை தொடர்ந்து அணிவதை லிண்ட வழக்கமாக கொண்டுள்ளார்.

அதாவது இளவரசியான பின்னர் முக்கிய பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது மெர்க்கல் அணிந்த உடைகளை போன்ற உடைகளை லிண்டா அணிகிறார்.

மெர்க்கல் உடைகளின் விலை அளவுக்கு இல்லையென்றாலும், தன்னால் முடிந்த விலையில் உடைகளை லிண்டா வாங்குகிறார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லிண்டா வெளியிட்டு வருகிறார்.

Image: MEGIADRUMWORLD & GETTY

இது குறித்து லிண்டா கூறுகையில், நான் எப்போதுமே அரச குடும்பத்தை நேசிப்பவள், அதில் மெர்க்கல் இணைந்த பின்னர் அவரை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கினேன்.

மெர்க்கலை சிறந்த மனிதராக எனக்கு அதிகம் பிடிக்கும், அவரை போலவே நானும் இருக்க விரும்புகிறேன்.

மெர்க்கல் சக்திவாய்ந்த பெண்ணாக திகழ்வதோடு, அவரின் வாழ்க்கைமுறை அழகானது.

நான் எந்தளவு மெர்க்கலை பின்பற்றுகிறேன் என்பதை வெளியில் காட்ட தான் அவர் போலவே உடைகளை அணிகிறேன் என கூறியுள்ளார்.

Image: MEGIADRUMWORLD & GETTY
Image: MEGIADRUMWORLD & GETTY
Image: MEGIADRUMWORLD & GETTY

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்