பணப்பிரச்சினையால் வீட்டை விற்கிறார் பிரித்தானிய இளவரசர்? ஒரு அதிர்ச்சி செய்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி, பிஸியான அரண்மனை வாழ்க்கையிலிருந்து விலகி ரிலாக்ஸ் செய்வதற்காக லீசுக்கு எடுத்திருந்த வீட்டை கைவிட முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பணப்பிரச்சினைதான் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசருக்கு பணப்பிரச்சினையா என்று கேள்விகள் எழும்ப, Cotswoldsஇல் அமைந்திருக்கும் அந்த வீட்டிற்காக செலவு செய்யப்படும் தொகை, 3 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

லீஸ் தொகையை வரி கட்டும் குடிமக்கள் தங்கள் தோள்களில் சுமப்பார்கள் என்றாலும், கட்டிடத்திற்குள் உள்ள அசையும் மற்றும் அசையா பொருட்களின் செலவு ஹரி, மேகனின் சொந்த பணத்திலிருந்து செய்யப்பட வேண்டும்.

ஏற்கனவே அரண்மனையிலிருந்து வெளியேறி, Frogmore Cottageக்கு குடிபுக இருக்கும் நிலையில், இரண்டு வீடுகளுக்காக எதற்காக செலவு செய்ய வேண்டும் என்று எண்ணும் ஹரி மேகன் தம்பதி, Cotswoldsஇல் அமைந்திருக்கும் விடுமுறை இல்லத்திற்கான லீசை ரத்து செய்வது என முடிவு செய்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு முக்கிய நபர் தெரிவித்தார்.

ஆனால், அது உண்மையில்லை என்றும், அந்த விடுமுறை இல்லம், Windsor அல்லது Sandringham போன்று பலத்த பாதுகாப்பு நிறைந்த ஒரு இடம் இல்லை என்றும், அது ஒரு நிரந்தர ராஜ அரண்மனை இல்லை என்பதால், அந்த அளவுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது இல்லை என்றும், அதனாலேயே இனி அங்கு ஹரி, மேகன் தம்பதி தங்கப்போவதில்லை என்றும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி ஹரி அங்கு வரும்போதெல்லாம், அந்த வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

அதற்கான பாதுகாப்பு செலவு உள்ளூர் பொலிசாரால் நிர்வகிக்கப்பட வேண்டியுள்ளதோடு, ஹரி மேகன் தம்பதி அங்கு வரும்போதெல்லாம் அங்கு நிலவும் பரபரப்பையும் பொலிசாருக்கு ஏற்படும் அதிக அழுத்தத்தையும், உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers