கணவன் விபத்தில் சிக்கிய மறுநாளே பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட ராணி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் பிலிப் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த மறுநாளே, அவருடைய மனைவி ராணி எலிசபெத் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல், தனியாக கார் ஒட்டி சென்றுள்ளார்.

பிரித்தானிய இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான 97 வயதாகும் இளவரசர் பிலிப், நேற்று மதியம் 3 மணியளவில் தன்னுடைய லேண்ட் ரோவர் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த காயமுமின்றி உயிர்பிழைத்ததாக செய்திகள் வெளியாகின.

மாறாக விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்த தாய் மற்றும் குழந்தை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த விபத்தில் இளவரசர் உயிர் தப்பியது அரிதான ஒன்றே என பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் விபத்து நடந்தபொழுது கார் தலைகீழாக உருண்டது என நேரில் பார்த்தவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், விபத்து நடந்த இடத்திலிருந்து சிறுது தூரம் வரை ராணி கார் ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த நேரம் சீட் பெல்ட் அணியாமல் ராணி கார் ஒட்டியிருக்கிறார்.

பிரித்தானியாவில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாயமான சட்டமாகும். ஆனால் இந்த சட்டம் ராணிக்கு பொருந்தாது.

ராணி 1945 ல் ராணுவத்துடன் இணைந்து பணியாற்றிய போது கார் ஓட்ட கற்றுக்கொண்டார். அதனால் அவருக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என செய்திகள் கூறுகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்