பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் தந்தைக்கு லாட்டரியில் விழுந்த பரிசு: எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் தந்தை தாமஸுக்கு கடந்த 1990ஆம் ஆண்டு லாட்டரியில் $750,000 பரிசு விழுந்தது தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்ட மெர்க்கல் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் மெர்க்கலின் தந்தை தாமஸ் குறித்த ஒரு தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

லாட்டரி சீட்டுகளை அதிகம் வாங்கும் பழக்கம் கொண்ட தாமஸுக்கு கலிபோர்னியா லாட்டரி குலுக்கலில் கடந்த 1990ஆம் ஆண்டு $750,000 பரிசு விழுந்தது.

இந்த தகவல் மெர்க்கலின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை Andrew Morton என்பவர் எழுதியுள்ளார்.

அதன்படி, லாட்டரியில் விழுந்த பணத்தின் ஒருபகுதியை வைத்து அப்போது மாணவியாக இருந்த மெர்க்கலை Immaculate Heart நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியில் தாமஸ் படிக்க வைத்துள்ளார்.

ஆனால் பெரும்பகுதியான லாட்டரி பணத்தை கடனில் மூழ்கியிருந்ததன் காரணமாக தாமஸ் இழந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்