மேகன் குழந்தைக்கு ஞானத்தாய் ஆகும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு, பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவை ஞானத்தாயாக நியமிக்க பரிசீலனை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் ஹரி, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க நடிகை மேகனை திருமணம் செய்துகொண்டார்.

இளவரசி யூஜின் திருமணம் முடிந்த இரண்டு நாட்கள் கழித்து, மேகன் கர்ப்பமாக இருக்கிறார் என அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது.

இதனை அரச குடும்பத்து ரசிகர்கள் பலரும் கொண்டாடியதோடு, சமூகவலைத்தளங்களில் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

தம்பதியின் முதல் குழந்தை இளவேனிற்காலத்தில் பிறக்கும் என அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகியிருந்தன.

குழந்தை பிறந்த பின்னர், கிறிஸ்தவ முறைப்படி நடைபெறும் பெயர் சூட்டும் விழாவில் ஞானத்தாயாக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இளவரசி மேகன், தனது தோழியும், நடிகையுமான பிரியங்கா சோப்ராவை ஞானத்தாயாகவும், நிக் ஜோனாஸ்சை ஞானத்தந்தையாகவும் அமர்த்திக்கொள்ள பரிசீலிப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ போல்கே தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகை பிரியங்கா சோப்ரா, ஹரி -மேகன் திருமணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்