மகாராணிக்கும் ஒரு கவலை: கணவர் தன்னுடன் காலை உணவு அருந்துவதில்லையாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சாதாரண மக்களுக்குத்தான் கவலை என்றால், மகாராணிக்கும் ஒரு கவலை இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா?

ஓய்வு பெற்றாலும் பெற்றார், பிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் நன்றாகவே தனது ஓய்வு காலத்தை என்ஜாய் பண்ணுகிறார்.

முன்பெல்லாம் அவர் போவதும் வருவதும் முன் கூட்டியே திட்டமிடப்படும்.

ஒரு இடத்திற்கு 10.15க்கு அவர் செல்ல வேண்டுமானால் அதை உறுதி செய்யும் கடிதம் ஒன்று அனுப்பப்படும்.

இப்போது அவர் நேரத்தைக் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. ஓய்வு பெற்றதிலிருந்தே தான் விரும்பிய நேரத்திற்கு வருகிறார், போகிறார்.

ஓய்வு பெற்று 18 மாதங்களான நிலையில், திருமணமானதிலிருந்து அனுபவிக்காத ஒரு சுதந்திரத்தை நன்றாகவே அனுபவிக்கிறார் அவர். அவற்றில் ஒன்றுதான், தானே கார் ஓட்டும் சுதந்திரம்.

வியாழனன்று நடந்த விபத்து அதற்கு ஒரு இடைஞ்சலாகிவிட்டது. Balmoralஇல் ஒருமுறை மகாராணியாரும், இளவரசர் பிலிப்பும் தனித்தனியே பயணிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, தானே தனியாக கார் ஓட்டிச் செல்ல வேண்டும் என அடம்பிடித்தார் இளவரசர் பிலிப். பின்னர் மகாராணி தலையிட்ட பிறகுதான் தன்னுடன் ஒரு பாதுகாவலரை அனுமதித்தார்.

இப்போது பயணம் என்றில்லை, காலை உணவு கூட தனியாகத்தான் அருந்துகிறாராம் இளவரசர் பிலிப்.

அது மகாராணியாருக்கு கொஞ்சம் வருத்தம்தான், அவரை இன்னும் மிஸ் பண்ணுகிறார் மகாராணியார். இப்போது மகாராணியார் இளவரசர் பிலிப் இன்றி தனியாகத்தான் காலை உணவு அருந்துகிறார்.

இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றபின், இளவரசர் ஆண்ட்ரூவும் மனைவியும்தான் அதிகம் மகாராணியாருடன் நேரம் செலவிடுகிறார்களாம்.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்