ஒரு முத்தத்தால் உயிருக்கு போராடும் ஒரு வயது இங்கிலாந்து குழந்தை: எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இங்கிலாந்தின் Darlington நகரில் Kaylah Merritt என்ற ஒரு வயது குழந்தை Herpes(ஒரு வகை படர்தாமரை) பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவது குறித்து அக்குழந்தையின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

Brogan Thomas - Connor Merritt தம்பதியினரின் ஒரே மகள் Kaylah. ஒரு வயதான இக்குழந்தைக்கு அவரது உறவினர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ளார்.

முத்தம் கொடுத்த நபர் herpes பாதிக்கப்பட்டிருந்தார். herpes என்பது herpes simplex virus பாதிப்பால் ஏற்படும் ஒரு வகை படர்தாமரை ஆகும். , HSV-1, HSV-2 ஆகிய இருவரை வைரஸ்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக, உதடு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் போன்று இருக்கும். இது மெதுமெதுவாக அப்படியே உடல் முழுவதும் பரவி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுகிறது.

தற்போது, ஒரே ஒரு முத்தத்தால் Kaylah யின் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு நோய் எதிர்பபு சக்தி குறைந்துவிட்டது என்றும் உயிருக்கு ஆபத்து எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தாய் கூறியதாவது, ஒரே ஒரு முத்தத்தால் எங்களது குழந்தைக்கு இப்படியாகிவிட்டது, அவள் வேதனையால் துடிப்பதை எங்களால் பார்க்க இயலவில்லை, ஏனைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு யாரேனும் உதடுகளால் முத்தம் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்