நான்காவது குழந்தைக்கு திட்டமிடும் இளவரசி கேட்: காரணம் இதுதானாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தாலும், நான்காவதாக ஒரு குழந்தைக்கு தாயாக திட்டமிடுகிறாராம் பிரித்தானிய இளவரசி கேட்.

பிரித்தானிய இளவரசர் வில்லியமுக்கும் கேட்டுக்கும் ஐந்து வயதில் குட்டி இளவரசர் ஜார்ஜ், மூன்று வயதில் சார்லட், ஒன்பது மாதக் குழந்தையான லூயிஸ் என மூன்று குழந்தைகள் இருப்பது யாவரும் அறிந்ததே.

குட்டி இளவரசர் ஜார்ஜுக்கும் இளவரசி சார்லட்டுக்கும் இடையே ஒரு ஆழமான பந்தம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ள இளவரசி கேட், இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதாக கேட்டுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

எப்படி ஜார்ஜுக்கும் சார்லட்டுக்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பு காணப்படுகிறதோ, அதேபோல், லூயிஸுக்கும் அவருக்கு நெருக்கமான வயதில் தங்கை வேண்டும் என கேட் விரும்புகிறாராம்.

தன் மனைவியின் விருப்பத்திற்கு இளவரசர் வில்லியமும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

பெரும்பாலும் கேட் தன் விருப்பத்திற்குத்தான் முடிவெடுப்பார் என்றாலும், வில்லியம் எப்போதுமே தன் மனைவியை மகிழ்ச்சியாக வைப்பதற்காக கேட்டிற்கு ஆதரவாகவே இருப்பார் என்றும், திருமணத்திற்கு முன்பே வில்லியம் கேட்டுக்கு செய்து கொடுத்த சத்தியம் அது என்றும் கேட்டுக்கு நெருக்கமான அந்த நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers