6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மொத்தமாக வாங்கிய பிரித்தானிய இந்தியர்: சிலிர்க்க வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தொழிலதிபர் ஒருவர் தமது உடைக்கு தோதான வண்ணங்களில் 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மொத்தமாக வாங்கி அசத்தியுள்ளார்.

பிரித்தானிய தொழிலதிபரான ரூபன் சிங் கடந்த ஆண்டு தமது பாரம்பரிய உடையான டர்பனை பிரித்தானியர் ஒரு துணிக்கட்டு என கிண்டலடித்ததால்,

அதற்கு பழிவாங்கும் வகையில் தமது தலைப்பாவின் நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி செய்திகளில் வலம் வந்தவர்.

தற்போது மீண்டும் புத்தம் புதிதான 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மொத்தமாக வாங்கி அனைவரையும் அசத்தியுள்ளார்.

இதில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் Phantoms வகை எனவும் எஞ்சிய 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் Cullinans வகை எனவும் தெரியவந்துள்ளது.

ரூபன் சிங்கிடம் மொத்தம் 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. சமூக வலைதளங்களில் பிரபலமான ரூபன் சிங் தமது கார்களின் வரிசை தொடர்பில் புகைப்படங்கள் வெளியிட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தமது 17 வயதில் Miss Attitude என்ற நிறுவனத்தை தொடங்கிய ரூபன் சிங், அதை பிரித்தானியாவின் முதல் தர நிறுவனமாக மாற்றிக் காட்டினார்.

அதன் பின்னர் குறித்த நிறுவனத்தை வெறும் ஒரு பவுண்டு தொகைக்கு விற்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers