செய்யாத குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற அப்பாவி: 42 வருடங்களுக்கு பின் வெளியான உண்மை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர், ஒரு அப்பாவி என டி.என்.ஏ சோதனையில் தெரியவந்துள்ளது.

வடக்கு வேல்ஸ் பகுதியை சேர்ந்த ஜேனட் கம்யூன்ஸ் என்கிற 15 வயது சிறுமி, 1976ம் ஆண்டு தன்னுடைய வீட்டின் அருகே நண்பர்களுடன் ஒளிந்து, பிடிக்கும் விளையாட்டு விளையாடி கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென மாயமான அவர், 3 நாட்களுக்கு பிறகு சடலமாக உடல் சிதைக்கப்பட்ட நிலையில், ஆரம்ப பள்ளி அருகே உள்ள தரிசு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நோயல் ஜோன்ஸ் (61) என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவர் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் தற்போது உண்மை குற்றவாளியை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

முன்னாள் ராணுவ வீரர் ஸ்டீபன் ஹவ் (58), 15 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவருடைய டி.என்.ஏ ஆய்வுகள், ஜேனட் உடன் ஒத்துப்போவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்டீபன் தன்னுடைய 18 வயதில் ஜேனட்டை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

இதனால் அப்பாவியான ஜோன்ஸக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக ஸ்காட்டிஷ் தொழிலதிபர் பிரையன் சவுடர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் நிரபராதி தண்டிக்கப்பட்டதை நினைத்து நீதிபதிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers