பிரித்தானிய இளம்பெண்ணை மதச்சடங்கு நடத்தி நிர்வாணமாக்கி ஓடவிட்ட ஜிப்ஸிக்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒரு பிரித்தானிய இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திக் கொண்டுபோய், நிர்வாணப்படுத்தி, மொட்டையடித்து கத்தியால் குத்தி காயப்படுத்தி, ஓடவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதெல்லாம், தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரை அந்த பெண் காதலிப்பதாக தவறாக எண்ணியதால்தான் நடந்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

South Shieldsஐச் சேர்ந்த Leighanne Rumney (22) போர்ச்சுகல்லில் உள்ள ஒரு பாரில் வெயிட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது ரோமா ஜிப்ஸிக்கள் என்னும் இனத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு ஆணுக்கு Rumney மீது ஒரு ஈர்ப்பு ஏற்படிருக்கிறது.

அவரும் Rumneyயும் காதலிப்பதாக தவறாக புரிந்து கொண்ட ரோமா ஜிப்ஸிக்கள், தங்கள் இனத்தைச் சேர்ந்த திருமணமான ஒருவரை இன்னொரு இனத்தைச் சேர்ந்த பெண் காதலிக்கக்கூடாது என்பதற்காக அவரை தண்டிக்க முடிவு செய்துள்ளனர்.

கார் ஒன்றில் Rumneyயைக் கடத்திச் சென்ற அந்த நபரின் உறவினர்கள், அவரைக் காட்டுக்குள் கொண்டு சென்று மதச்சடங்கு ஒன்றை நடத்தி, ஆண்களும் பெண்களும் சேர்ந்து நிர்வாணமாக்கியுள்ளனர்.

பின்னர் பை ஒன்றை எடுத்து திறக்க, அதனுள் கத்திகளும் கத்திரிக்கோல்களும் இருப்பதைக் கண்ட Rumney, அவ்வளவுதான், தனது வாழ்க்கை முடிந்தது என்ற முடிவுக்கே வந்திருக்கிறார்.

Rumneyயை சூழ்ந்து கொண்ட அந்த நபர்களில், இரண்டு பெண்கள், அந்த கத்திகளை எடுத்து அவரது முதுகில் குத்த, இரத்தம் கொட்ட ஆரம்பித்திருக்கிறது.

பின்னர் கத்திரிக்கோலால் அவரது முடியை வெட்டி, கிட்டத்தட்ட மொட்டையாக்கி ஓட விட்டிருக்கின்றனர்.

தன்னைக் கொன்றுவிடுவார்கள் என மரண பயத்தில் இருந்த Rumneyக்கு அப்போதுதான், அது தன்னை அவமானப்படுத்துவதற்காக செய்யப்பட்ட மதச்சடங்கு என்பது புரிந்திருக்கிறது.

நிர்வாணத்தைக் கையால் மூடிக்கொண்டு, முதுகிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட வெகு தூரம் ஓடி, சாலை ஒன்றில் வந்த காரை நிறுத்திய அவரது பரிதாப நிலை கண்ட அந்த காரை ஓட்டி வந்த நபர், மனமிரங்கி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.

சம்பவம் குறித்து Rumney பொலிசில் புகாரளிக்க, பொலிசார் அந்த ஜிப்ஸி இனத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers