தவறுதலாக கிடைத்த £8.9 மில்லியன் பணம்... மகிழ்ச்சியடைந்த நபர்.. பின்னர் என்ன நடந்தது தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தை சேர்ந்த 18 வயது இளைஞரின் வங்கி கணக்கில் தவறுதலாக £8.9 மில்லியன் வந்த நிலையில், பின்னர் வங்கி தனது தவறை திருத்தி கொண்டுள்ளது.

Belfast நகரை சேர்ந்தவர் டேன் கிலெஸ்பி (18). இவரின் பாட்டி £8,900 பணத்தை காசோலையில் எழுதி டேனுக்கு கொடுத்தார்.

அதை தனது வங்கிக்கணக்கில் டேன் போட்டார். பின்னர் அடுத்தநாள் வங்கி கணக்கை பார்த்த போது இன்ப அதிர்ச்சியில் டேன் உறைந்து போனார்.

காரணம் அவர் கணக்கில் £8,900க்கு பதிலாக £8.9 மில்லியன் பணம் சேர்ந்திருந்தது.

இது குறித்து டேனின் தாய் கரோலின் கூறுகையில், இவ்வளவு பணம் கணக்கில் இருப்பதை பார்த்து என் மகன் மகிழ்ச்சியில் திளைத்தான்.

பின்னர் விலையுயர்ந்த கார் வாங்க போவதாக அவன் கூறினான்.

ஆனால் நான் அவனிடம், வங்கியில் பணம் தவறுதலாக போடப்பட்டுள்ளது, அது நம்முடைய பணம் கிடையாது.

அதை செலவு செய்தால் பின்னர் நாம் அதை திருப்பி தரவேண்டும் என கூறினேன் என தெரிவித்தார்.

ஆனால் தங்களது தவறை உணர்ந்த குறித்த வங்கி அதை திருத்தி £8.9 மில்லியன் பணத்தை டேன் கணக்கிலிருந்து எடுத்துள்ளது.

இவ்வளவு பணம் தனது கணக்கில் இருந்ததன் மூலம் ஒருநாளைக்கு நான் கோடீஸ்வரனாக வாழ்ந்தேன் என டேன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers