பிரித்தானிய குடும்பத்திற்கு ஒரு புது வாரிசு? மௌனம் காக்கும் ராஜ குடும்பத்தினர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிறந்த Simon Dorante-Day (52), 18 மாதக் குழந்தையாக இருக்கும்போது கேரன் மற்றும் டேவிட் தம்பதியருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் Simon தன்னை தத்துக் கொடுத்தது இளவரசர் சார்லஸின் இந்நாள் மனைவியான கமீலாதான் என்கிறார்.

அப்போது கமீலாவுக்கு 18 வயது என்றும் சார்லசுக்கு 17 வயது என்றும் தெரிவிக்கும் Simon, தான் சார்லஸ் கமீலா தம்பதியரின் காதலுக்கு கிடைத்த பரிசு என்கிறார்.

சமீபத்தில் தனது இளவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனக்கும் ராஜ குடும்பத்தினருக்கும் இருக்கும் ஒற்றுமைகளைப் பட்டியலிடுகிறார்.

அந்த காலகட்டத்தில் பல வதந்திகள் ராஜ குடும்பம் குறித்து உலவியபோது என்னைக் குறித்தும் பேசப்பட்டது என்கிறார் Simon.

அதோடு நிற்காமல், டயானாவுக்கு இது குறித்து தெரியும் என்று தான் எண்ணுவதாகவும், அதை வெளியில் சொல்வதற்குமுன் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் Simon.

தான் சார்லஸ் கமீலாவின் மகன் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கி, அவ்வப்போது அதில் அப்டேட்களை பதிவிடுவது Simonஇன் வழக்கம்.

அவற்றில் தற்போது Simon வெளியிடப்பட்ட அவரது இளவயது புகைப்படத்தைக் கண்டவர்கள், கமீலாவின் தலைமுடியும், இளவரசர் வில்லியமுடைய முக ஜாடையும், மகாராணியாரின் முக எலும்பு அமைப்பும் அவருக்கு இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தான் இளவரசர் சார்லசுக்கும் கமீலாவுக்கும் பிறந்ததாக Simon கூறிவரும் நிலையில், இதுவரை சார்லசோ கமீலாவோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்