இளவரசி டயானா செய்த அதே தவறை செய்யும் மேகன்: அது என்ன தவறு தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

1995ஆம் ஆண்டு,டயானா தனது திருமண வாழ்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக் கொடுத்த ஒரு பேட்டி அவர் முற்றிலும் எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தியது.

அதனால் அவர் தனது தனிச்செயலர் மற்றும் ஊடக செயலராக பணியாற்றுபவரை இழந்தார். அந்த தனிச்செயலர் ஒரு இருட்டறையில் வைத்து டாயானாவின் பேட்டி குறித்து விசாரிக்கப்பட்டதையடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்தார்.

இதையடுத்தே மகாராணியார் தலையிட்டு டயானாவையும் இளவரசர் சார்லசையும் விவாரத்து செய்ய வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

அப்போது டயானா தங்கள் திருமண வாழ்விலுள்ள பிரச்சினைகளை Andrew Morton என்னும் பிரபல எழுத்தாளருக்கு தெரிவிக்கும்படி தனது நெருங்கிய நண்பர் வட்டத்திடம் கேட்டுக்கொள்ள, அதன் விளைவாக Diana: Her True Story என்னும் புத்தகம் வெளியானது.

அது கோடிக்கணக்கான பிரித்தானியர்கள் மற்றும் பிரித்தானியர்கள் அல்லாதவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அதற்கப்புறம் அந்த நண்பர்கள் டயானாவை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

அந்த சூழலிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்காக, தன்னை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்ட டயானா, தனது பொது வாழ்க்கையில் கவனம் செலுத்தலானார். இளவரசி மேகனுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை.

என்றாலும், தனது நெருக்கமான நண்பர்கள் வாயிலாக, அரண்மனையில் ஏதோ பிரச்சினை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார் மேகன்.

ஒரு நடிகையாக இருந்தபோது, தனது தொலைக்காட்சி வாழ்க்கைக்கு விளம்பரத்தை உருவாக்குவதற்கு வேண்டுமானால் மேகனின் இந்த யுக்தி உதவலாம். ஆனால், திருமண வாழ்க்கையில்...

தானும் ஹரியும் பொது இடங்களில் உரையாற்றுவதற்கான விடயங்களைக் கூட, தாங்கள் இருவரும் சேர்ந்தே தயாரிப்பதாக மேகன் தனது நண்பர்கள் மூலம் வெளிப்படுத்த, பாவம் ஹரி, ராஜ குடும்ப வாரிசு, ஒரு சின்ன விடயத்தைக் கூட தானாக செய்ய முடியாத சூழலுக்கு ஆளாகி விட்டார் என்னும் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இப்படி வெளியாகும் செய்திகளுக்கு அரண்மனை சார்பில் மறுப்பு வெளியிடப்படும்.

மேகன் ஹரி விடயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால், ஹரி விரும்பிதான் தன் மனைவிக்கு தலையாட்டுகிறார் என்றே தோன்றுகிறது.

எப்படியோ அவ்வப்போது தேவையில்லாத பேட்டிகள் அளித்து எதிர்மறையாக பிரபலமான மேகனின் தந்தை கூட அமைதியாகிவிட்ட நிலையில், இளவரசி டயானா செய்த அதே தவறை மேகனும் செய்கிறார், அது நல்லதுக்கு அல்ல என்கிறார்கள் விமர்சகர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers