தனிமை வாட்டுகிறது! என்னுடன் பழக யாராவது வாருங்கள் என பேஸ்புக்கில் பதிவிட்ட பெண்... அடுத்து நடந்த சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன்னிடம் பேசி பழக நண்பர்கள் இல்லை எனவும், வெளியிடங்களுக்கு தனியாகவே செல்கிறேன் எனவும் வருத்தப்பட்ட பெண்ணுக்கு தற்போது பலர் நண்பர்களாக கிடைத்துள்ளனர்.

டெபோரா ஹாக்கின்ஸ் என்ற பெண் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

இருவரும் வளரும் வரை தாயுடன் நேரம் செலவிட்ட நிலையில் பின்னர் தங்களது வேலையை பார்க்க தொடங்கினர். இதனால் தனிமையில் வாடி போனார் ஹாக்கின்ஸ்.

அதாவது திரையரங்குகள், உணவகங்கள் போன்ற இடங்களுக்கு தன்னுடன் வர கூட நண்பர்கள் யாரும் இல்லை என கவலை கொண்டார்.

Caters News Agency

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், என்னுடன் பேசி பழகுவதற்கு யாருமேயில்லை, தனிமை என்னை வாட்டுகிறது.

திரைப்படங்கள் மற்றும் உணவகங்களுக்கு கூட தனியாக தான் செல்கிறேன் என பதிவிட்டார்.

இந்த பதிவுக்கு அமோகமான ஆதரவு கிடைத்தது. பலரும் ஹாக்கின்ஸுடன் நட்பு பாராட்ட விரும்பினார்கள்.

இதையடுத்து பேஸ்புக்கில் இது தொடர்பாக தனியாக ஒரு பக்கத்தை தொடங்கினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்த எட்டு மாதங்களில் அந்த பக்கத்தில் 300 பேர் இணைந்துள்ளனர்.

Caters News Agency

ஹாக்கின்ஸ் தனது புதிய நண்பர்கள் பலரை அடிக்கடி தற்போது சந்தித்து வருகிறார்.

தான் விரும்பிய இடங்களுக்கு அவர்களோடு சென்று வருகிறார்.

தற்போது என் மகள்களை விட அதிகமாக நண்பர்களோடு நான் தான் வெளியிடங்களுக்கு செல்கிறேன், மிகவும் பிசியாகவும் முன்பை விட மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.

Caters News Agency

Caters News Agency

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers