லண்டனில் சாதிக்க காத்திருக்கும் தமிழ் பெண்: யார் அவர்?

Report Print Raju Raju in பிரித்தானியா

சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை, லண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை செனாய் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கனகலட்சுமி தமிழை மாணவர்களுக்கு எளிமையாகவும் சுவையாகவும் கற்பிக்கும் முறைகளைப் புதிது புதிகாக உருவாக்கி வருபவர்.

இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS (School of Orietal and African Studies) கல்லூரியில் நிறுவப்படும் தமிழ்த்துறையின் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கனகலட்சுமி கூறுகையில், இந்த வாய்ப்பு அதிக மகிழ்ச்சியையும், பொறுப்பையும் தருகிறது.

என்னுடைய பணி என்பது லண்டன் சென்று தமிழ் வளர்ச்சி சார்ந்த விடயங்களை முன்னெடுக்கவும், தமிழ் மொழி கற்பித்தலில் ஆர்வமும் திறனும் உள்ள ஆசிரியர்களை அந்த அமைப்புக்கு ஒருங்கிணைக்கும் பணியையும் செய்ய வேண்டும்.

மேலும் அங்கு பயிலும் மாணவர்களுக்கான ஆய்வுப் பணிக்கு வழிகாட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers