இங்கிலாந்தில் தானாக உருண்டோடும் அரிதான பனி உருளைகள்! நேரில் பார்த்ததும் ஆச்சர்யமடைந்த நபர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தின் மால்பாரோ பகுதியில் நிலப்பரப்பின் மீது காணப்படும் அரிதான பனி உருளைகளை பார்த்து ஆச்சரியமடைந்த வன தொழிலாளி, அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் மால்போரா பகுதியில் உள்ள காடுகளில் பணிபுரிந்து வருபவர் 51 வயதான வன தொழிலாளி பிரையன் பேய்ஸ்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கமான தன்னுடைய பணிக்காக காட்டு வழியே சென்றுள்ளார்.

அங்கு சற்றும் எதிர்பார்க்காத வகையில், சக்கரத்தை போல பனிக்கட்டிகள் உருண்டு வந்து நின்றுள்ளன. இதனை பார்த்த அவர், யாரேனும் உருட்டியிருக்கலாம் என நினைத்துக்கொண்டு அருகில் சென்று பார்த்துள்ளார்.

ஆனால் அங்கு எந்த மனித கால்தடங்களும் இல்லாததை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளார். மேலும் இதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து வானியல் வல்லுனர் இயன் பெர்குசன் கூறுகையில், இதுபோன்ற பனி உருளைகள் உருவாவது மிகவும் அரிதான ஒன்று, மற்றும் அபூர்வமானது. இந்த அரிதான வானியல் மாற்றத்தினை பார்க்க பிரையன் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நிலப்பரப்பில் இருந்த பனிதுகள்களின் மீது காற்று வேகமாக வீசியதால், படர்ந்திருந்த பனிதுகள்கள் ஒருங்கிணைந்து உருளைகளாக மாறியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers