பட்டப்பகலில் குழந்தையின் கண்முன்னே பிரித்தானிய தாயாருக்கு நேர்ந்த துயரம்: பொலிஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

தென்கிழக்கு இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் வாள்வெட்டுக்கு பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சர்ரே கவுண்டியில் உள்ள Cheam பகுதியில் அமைந்துள்ள Meadow பாடசாலை அருகேயே இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க அந்த தாயாருக்கும் தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் உள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இருவரும் வாகனம் ஒன்றில் மாயமான நிலையில் பொலிசார் துரத்திச் சென்று மடக்கியுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவிக்கையில், சுமார் 3 மணியளவில் மகனுடன் குறித்த பெண் நடந்து சென்றதாகவும்,

திடீரென்று வாகனம் ஒன்றில் வந்த ஒருவர் குறித்த பெண்மணியை துரத்தியதாகவும், சில அடி தூரம் சென்றதும் அந்த பெண்மணியை அந்த நபர் தாக்கியதாகவும், அதில் அவர் தரையில் சரிந்து விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒருவர் 999 எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் பொலிசார் குறித்த பெண்மணியை மீட்டு லண்டன் மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக பின்னர் தகவல் வெளியானது. முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண்மணிக்கு தாக்குதலில் ஈடுபட்ட நபர் முன்னரே அறிமுகமானவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers