லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்த டாக்சி ஓட்டுனர்: விழுந்த €1 மில்லியன் பரிசு... இறுதியில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்த நபருக்கு €1 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் இறுதியில் பரிசை கைப்பற்றியுள்ளார்.

தலைநகர் டுப்ளினை சேர்ந்த டாக்சி ஓட்டுனர் ஒருவர் கடந்த மாதம் 14ஆம் திகதி பம்பர் லாட்டரி சீட்டு வாங்கினார்.

எப்போதும் லாட்டரி சீட்டுகளை வாங்கினால் அதற்கு பரிசு ஏதும் விழுந்ததா என மாத இறுதியில் சரிபார்த்து கொள்வார்.

ஆனால் கடந்த மாதம் வாங்கிய சீட்டை சரி பார்க்க அவர் மறந்துவிட்டார். அந்த சீட்டுக்கு முதல் பரிசாக €1 மில்லியன் விழுந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திடீரென லாட்டரி சீட்டு வாங்கியது ஓட்டுனருக்கு நினைவு வர அதை சரிபார்த்தார்.

அப்போது தனக்கு €1 மில்லியன் பரிசு விழுந்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் லாட்டரி நிறுவனத்துக்கு சென்று தனக்கு விழுந்த பரிசை பெற்று கொண்டார்.

இது குறித்து வெற்றியாளரான டாக்சி ஓட்டுனர் கூறுகையில், நான் முற்றிலும் திகைத்துப் போயுள்ளேன், என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை.

லாட்டரி டிக்கெட் வாங்கியதை மறந்துவிட்டேன், பின்னர் அது நினைவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த பரிசு பணத்தில் கடற்கரை அருகில் பெரிய வீடு வாங்குவேன், இது என் நீண்டநாள் கனவாகும்.

லாட்டரி சீட்டுகள் வாங்கினால் அதற்கு பரிசு விழுந்ததா என்பதை சரிபார்த்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதற்கு எனக்கு நடந்த இந்த நிகழ்வே சாட்சி என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers