குழந்தையின் கண்முன்னே தாயாரை கொன்று தள்ளிய கொடூரர்கள்: வெளியானது முதல் புகைப்படம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

தென்கிழக்கு இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் மர்ம நபர்களால் கொன்று தள்ளப்பட்ட தாயாரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

சர்ரே கவுண்டியில் உள்ள Cheam பகுதியில் அமைந்துள்ள Meadow பாடசாலை அருகேயே 39 வயதான அலினா மென்டெஸ் என்பவருக்கு இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவருக்கு 40 வயது எனவும் அவருக்கு உதவிய நபருக்கு 50 வயது எனவும்,

இதில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரை அலினா மென்டெஸ்கு ஏற்கெனவே அறிமுகம் உள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இருவரும் வாகனம் ஒன்றில் மாயமான நிலையில் பொலிசார் துரத்திச் சென்று மடக்கியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அலினா மென்டெஸ் பிரேசில் நாட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவிக்கையில், சுமார் 3 மணியளவில் மகனுடன் குறித்த பெண் நடந்து சென்றதாகவும்,

திடீரென்று வாகனம் ஒன்றில் வந்த ஒருவர் குறித்த பெண்மணியை துரத்தியதாகவும், சில அடி தூரம் சென்றதும் அந்த பெண்மணியை அந்த நபர் தாக்கியதாகவும், அதில் அவர் தரையில் சரிந்து விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அலினாவின் இழப்பு தங்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாகவும், மிகவும் அன்பானவரும் பழகுவதற்கு இனிமையானவருமான ஒரு நல்ல உள்ளத்தை இழந்து தவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பில் அவரது நண்பர்கள் நலம் விரும்பிகள் என அனைவரும் தங்களுக்கு தெரியவரும் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers