என் இதயத்தை சுக்குநூறாக நொறுக்கி விட்டீர்கள்: வெளியானது மேகன் எழுதிய உருக்கமான கடிதம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் தன்னுடைய தந்தைக்கு எழுதியிருக்கும் உருக்கமான கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இரண்டு மாரடைப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த தாமஸ், தன்னுடைய மகள் மேகன் மற்றும் பிரித்தானிய இளவரசர் ஹரி திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

அதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ஹரி குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மேகன் தன்னுடைய தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் மேகனுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது.

ஆனால் இன்னும் தந்தையுடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கும், மேகனுக்கு மன்னிப்பு கேட்டு அவருடைய தந்தையும் கடந்த ஆண்டின் இறுதியில் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய தந்தைக்கு மேகன் ஒரு உருக்கமான கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த கடிதத்தில், "அப்பா கனத்த இதயத்துடன் இதை நான் எழுதுகிறேன். நீங்கள் ஏன் இந்த வழியை தேர்வு செய்தீர்கள் என்பது புரியவில்லை. நீங்கள் கண்மூடித்தனமாக பேசுவது எனக்கு வலியை ஏற்படுத்திகிறது.

சாதாரணமாக அல்ல... உங்கள் நடவடிக்கைகள் என் இதயத்தை ஒரு மில்லியன் துண்டுகளாக உடைத்துவிட்டன. ஏனென்றால் நீங்கள் தேவையற்ற மற்றும் நியாயப்படுத்த முடியாத வேதனையை உருவாக்கியிருக்கிறீர்கள்.

"அதனை சரி செய்ய எந்த சத்தியமும் செய்ய தேவையில்லை. நான் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டேன்." என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான் உங்களுக்கு எந்த நிதியுதவியும் அளித்ததில்லை என கூறினீர்கள். நீங்கள் எந்த உதவியும் என்னிடம் கேட்கவில்லை என கூறுவது பொய்.

நீங்கள் கடந்த அக்டோபரில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளீர்கள்: "நான் நிதி உதவிக்காக உங்களிடம் அதிக அளவு சார்ந்திருப்பப்பதற்காக வருந்துகிறேன்.ஆனால் நீங்கள் இன்னும் எனக்கு உதவ முடியும் என்றால் என் மீது வைத்திருக்கும் விசுவாசத்திற்காக தயவுசெய்து உதவி செய்" என கூறியிருந்தீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு சேர்த்து, நீங்கள் என்மீது உண்மையான அன்பு வைத்திருந்தால், நீங்கள் செய்திகளில் கூறுவதை நிறுத்துங்கள். தயவு செய்து எங்களை அமைதியான ஒரு வாழ்வை வாழ விடுங்கள் என அந்த கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers