போதை மருந்து... ஒரே நேரத்தில் 8 அழகிகளுடன் உல்லாசம்: லொட்டறியில் மில்லியன்கள் அள்ளிய நபரின் இன்றைய பரிதாப நிலை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லொட்டறியில் மில்லியன்களை அள்ளிய பிரித்தானியர் இன்று மொத்த செல்வத்தையும் இழந்து கூலி வேலை செய்து பிழைக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் நார்ஃபோக் பகுதியை சேர்ந்த மைக்கேல் கரோல் என்பவருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு லொட்டறியில் சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு பரிசு விழுந்தது.

தற்போது 35 வயதாகும் கரோல், தம்மிடம் இருந்த 4 பவுண்டுகளுக்கு வாங்கிய லொட்டறியில் எதிர்பாராத வகையில் பணமழை கொட்டியது.

அப்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த இவரது காதலி சாண்ட்ராவை 2003 ஆம் ஆண்டு கரோல் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திடீரென்று கொட்டிய அதிர்ஷ்டத்தால் தடுமாறிப் போன கரோலின் நடவடிக்கை பிடிக்காமல் லொட்டறி பணத்தில் 1.4 மில்லியன் பவுண்டுகளை ஜீவனாம்சமாக பெற்றுக்கொண்டு சாண்ட்ரா பிரிந்து சென்றுள்ளார்.

அதன்பின்னரே கரோலின் வாழ்க்கை தாறுமாறாக மாறியது. நார்ஃபோக்கில் அமைந்துள்ள இவரது 5 படுக்கை அறை கொண்ட குடியிருப்பு பாலியல் விடுதியாக மாறியது.

ஒருநாளில் 8 அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கும் அளவுக்கு நீண்டது இவரது இரவுகள். மட்டுமின்றி இதுவரை தாம் 4,000 பெண்களுடன் படுக்கை பங்கிட்டதாகவும் கரோல் வெளிப்படுத்தியுள்ளார்.

மாதம் ஒருமுறை அழகிகளை அழைத்து பாலியல் கொண்டாட்டங்களை நடத்தியுள்ளார் கரோல், இதற்கு சுமார் 50,000 பவுண்டுகள் வரை செலவிட்டுள்ளார்.

மட்டுமின்றி கோகோயின் போதை மருந்துக்காக நாள் ஒன்றுக்கு 2,000 பவுண்டுகள் செலவிட்டுள்ளார்.

மேலும் இவரது 5 படுக்கை அறைகளில் இவருக்கு புதிதாக கிடைத்த நண்பர்கள் எப்போதும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதை பெருமையாக கருதியுள்ளார்.

மேலும், இந்த காலகட்டத்தில் சுமார் 30 முறை நீதிமன்ற விசாரணையிலும் சிக்கியுள்ளார் கரோல்.

2005 ஆம் ஆண்டு அதிக போதையில் நார்ஃபோக் பகுதியில் உள்ள 32 கடைகளை இவர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதே ஆண்டு இவரது வங்கிக் கணக்கில் ஒரே ஒரு மில்லியன் பவுண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது என்ற தகவலும் இவருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்த துவங்கிய கரோல் 2012 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மொத்த பணத்தையும் இழந்து ஒருவேளை உணவுக்கு வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

தனது 8 படுக்கை அறை கொண்ட நார்ஃபோக் இல்லத்தை வெறும் 150,000 பவுண்டுகளுக்கு விற்கும் நிலைக்கு பண நெருக்கடி கரோலை தாக்கியது.

தற்போது மாதம் 500 பவுண்டுகள் கட்டணத்தில் 2 படுக்கை அறை கொண்ட இல்லத்தில் குடியிருக்கும் கரோல்,

நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் உழைக்கிறார். மணிக்கு 10 பவுண்டுகள் கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு கரி மற்றும் மரத்துண்டுகளை விநியோகம் செய்து வருகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers