பிரித்தானியாவிற்கு வர விரும்பும் ஐ.எஸ்.அமைப்பில் சேர்ந்த மாணவி! இதுவரை எத்தனை பேர் நாடு திரும்பியுள்ளனர் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து தப்பில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த மாணவி மீண்டும் பிரித்தானியாவிற்கு வந்தால் என்ன நடக்கும் என்பது தொடர்பான ஐந்து முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.

தலைநகரான லண்டனிலிருந்து வெளியேறி ஐ.எஸ் அமைப்பில் தன்னுடைய 15 வயதில் சேர்ந்த மாணவி ஷமீனாபேகம் இப்போது கர்ப்பமாக இருப்பதால், அவர் நான் மீண்டும் பிரித்தானியாவிற்கு வர விரும்புகிறேன், என்னுடைய குழந்தைக்காக என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பற்றிய செய்தி தான் இப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக இராக் மற்றும் சிரியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்தால் அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர்.

ஏனெனில் அவர்கள் ஏதேனும் குற்றம் செய்து வந்திருக்கலாம், அல்லது அவர்களால் நாட்டின் பாதுக்காப்பிற்கு பிரச்சனை ஏற்படலாம், அந்த வகையில் தான் இவருக்கும் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

பிரித்தானியாவிலிருந்து தோராயமாக இதுவரை 850 பேர் பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். அதில் 145 பெண்கள், 50 பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள், இதில் 425 பேர் திரும்பியுள்ளனர், அதில் இரண்டு பேர் பெண்கள், ஒரு நபர் 18 வயதிற்குட்பட்டவர் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers