உதவி கோரிய பெண்ணை பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு பாகிஸ்தான் வம்சாவளியினர், தன்னிடம் உதவி கோரி வந்த ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு கைவிட்டு விட்டதாக அந்த பெண் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் லேபர் கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாஸர் அஹமது (62) மீது Tahira Zaman, (43) என்னும் பெண் புகாரளித்துள்ளார்.

மதத்தின் பெயரால் குணமாக்குவதாகக் கூறி பெண்களை ஏமாற்றி பிரச்சினை ஏற்படுத்தக்கூடியவர் என்று தான் எண்ணிய, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒரு நபர் மீது நடவடிக்கை எடுக்க உதவுவதற்காக அவர் நாஸரை அணுகியுள்ளார்.

ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டு நாஸர் தன்னுடன் பல முறை பாலுறவு கொண்டதாக Zaman குற்றம் சாட்டியுள்ளார்.

தான் அவருடன் விரும்பியே உறவு கொண்டதாகவும், தன்னை அவர் மணந்து கொள்வார் என்று நம்பியே இருந்ததாகவும், ஆனால் நாஸர் தன் மனைவியைப் பிரிய முடியாது என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் Zaman.

பொறுப்பில் இருப்பவர்களிடம், தான் நாஸரை நம்பியதாகவும், ஆனால் தான் அவர் மீது வைத்த நம்பிக்கையை பயன்படுத்தி தொடர்ந்து தன்னை படுக்கையில் பயன்படுத்திக் கொண்டதாகவும் Zaman புகாரளித்துள்ளார்.

இந்நிலையில் பெயர் வெளியிட விரும்பாத இன்னொரு பெண்ணும் தானும் நாஸரிடம் உதவி கோரியதாகவும், அதற்கு அவர் தன்னுடைய லண்டன் வீட்டில் ஒரு இரவு தன்னுடன் தங்க வேண்டும் என்று கேட்டதாகவும், தான் மறுத்து விட்டஹாகவும், பாலுறவு கொள்வதற்காகவே தன்னை நாஸர் அழைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நாஸர், நான் என் பதவியைப் பயன்படுத்தி பொதுமக்கள் யாருடனும் தவறான உறவு வைத்துக் கொண்டதும் இல்லை, எந்த பெண் முன்னிலையிலும் தரக்குறைவாக நடந்து கொண்டதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

லேபர் கட்சியின் உறுப்பினராக இருந்த நாஸர் யூதர்களுக்கெதிரான இனவெறுப்பு குற்றச்சாட்டுகளையடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers