லாட்டரியில் தம்பதிக்கு விழுந்த £1 மில்லியன் பரிசு... சில நாட்களில் காத்திருந்த அடுத்த இன்ப அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதிக்கு லாட்டரியில் £1 மில்லியன் பரிசு விழுந்த சில நாட்களில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Bristol-ஐ சேர்ந்த பெயர் வெளிவராத தம்பதிக்கு சமீபத்தில் தேசிய லாட்டரியில் £1 மில்லியன் பம்பர் பரிசு விழுந்தது.

ஆனால் பரிசு விழுந்ததை கொண்டாடுவதற்கு முன்னர் தம்பதிக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண் பரிசு விழுந்த இரண்டு நாட்களில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்தே பரிசு பணத்தை வைத்து கொண்டாட்டத்தை தம்பதி தொடங்கவுள்ளனர்.

அதன்படி திருமணம் செய்து கொள்ளாமல் இதுநாள் வரை வாழ்ந்து வந்த அவர்கள் விரைவில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்யவுள்ளனர்.

இதோடு தங்களது கனவு வீட்டையும் வாங்கவுள்ளனர்.

இதனிடையில் லாட்டரி நிறுவனத்தில் இருந்து தாங்கள் பரிசு பெறும் புகைப்படத்தை இன்று வெளியிடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers