லண்டன் பள்ளியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி மாணவி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டன் பள்ளியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட இந்திய வம்சாவளி மாணவியின் வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் மாதம் 2017 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் உள்ள ஹம்ப்ஸ்டீட்டின் பிரத்தியேக பெண்கள் பள்ளியில் பயின்று வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த எலானா மோண்டல் என்கிற மாணவி தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, ஆன்ட்ரூ வாக்கர் என்பவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வழக்கின் விசாரணையில் இந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்போது ஆன்ட்ரூ வாக்கர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சரியாக உணவு சாப்பிடாமல் தன்னை தானே தாக்கிக்கொள்ளும் பழக்கம் கொண்டிருந்த எலெனாவிற்கு பள்ளியின் குழந்தை மற்றும் இளம்பருவ மனநல சுகாதார சேவையால் ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டு வந்துள்ளது.

இதனால் அவர் மனைஉளைச்சலுக்கு ஆளாகி தான் தற்கொலை செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் இறப்பில் எந்த மர்மமும் இல்லை எனக்கூறி வழக்கினை முடித்து வைத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers