பிரித்தானிய தொலைக்காட்சியில் திடீரென ஆடையை களைந்து நின்ற பிரபல பத்திரிக்கையாளர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரெக்சிட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல பத்திரிக்கையாளரும், பாராளுமன்ற உறுப்பினர் போரிஸ் ஜான்சனின் தங்கையுமான ரேச்சல், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திடீரென ஆடையை களைந்து நிர்வாணமாக இருந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான பிரெக்சிட் நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வேகமாக முன்னெடுத்து வருகிறார்.

இதற்கு பெரும்பான்மனையான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், அரசியல் தலைவர்கள் துவங்கி பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த கேம்பிரிட்ஜின் பொருளாதார நிபுணரான Dr Victoria Bateman, நேரலையின் போது தன்னுடைய ஆடைகளை களைந்து நிர்வாணமாக பிரெக்சிட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்பொழுது அவருடைய நெஞ்சு பகுதியில், பிரெக்சிட் பிரித்தானியாவை நிர்வாணமாக்கி விடுகிறது என ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் பிரபல ஊடகத்தில் பிரெக்சிட் பற்றிய விவாதத்தின் போது பேசிக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரான போரிஸ் ஜான்சனின் தங்கை ரேச்சல், திடீரென ஆடைகளை களைய ஆரம்பித்துள்ளார்.

Victoria Bateman-ஐ முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட ரேச்சல், ஆடைகளை களைந்தபடியே பிரெக்சிட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் தான், அனைவரின் கவனத்தையும் பெற முடியுமென கூறியிருந்தார்.

இதற்கு இணையதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'அந்த சமயம் நான் உள்ளே ஒரு இறுக்கமான ஆடை அணிந்திருந்தேன். முழுநிர்வாணமாக இல்லை' என ரேச்சல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers