பாத் டப்பில் உள்ளாடையுடன் இறந்து கிடந்த பெண்: பரிதாப பின்னணி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மூன்று நாட்களாக மகளைக் காணவில்லை என பெற்றோர்கள் பொலிசில் புகாரளித்திருந்த நிலையில், வீட்டினருகே இருந்த பாத் டப்பில் அந்த இளம்பெண் உள்ளாடையுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் விண்ட்சரைச் சேர்ந்த Ella-Louise Tunney (26) திடீரென ஒரு நாள் மாயமானார்.

அவர் வெளியே எங்கேனும் சென்றிருக்கக்கூடும் என அவரது பெற்றோர் எண்ணிய நிலையில், மூன்று நாட்கள் வரை அவரைக் காணாததால் பொலிசில் புகாரளித்தனர்.

பொலிசார் வந்ததும், அவர் எங்கெல்லாம் சென்றிருக்கக்கூடும் என அவரது பெற்றோர் கூற, பொலிசாரின் எண்ணங்கள் திசை திருப்பப்பட்டாலும், பொலிசார் என்னும் முறையில் என்ன நடந்திருக்கலாம் என்று சிந்திக்கும்போது, Ellaவின் தந்தை கடைசியாக தன்னிடம் குளிக்க பாத் டப்பை தயார் செய்து தருமாறு கூறியதை நினைவு கூர்ந்திருக்கிறார்.

அதேபோல் Ella தனது தோழிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளில், பாத் டப்பில் குளிக்கப்போகிறேன், பாத் டப்பில் இருக்கிறேன் என்று அனுப்பப்பட்ட செய்திகளையும் பொலிசார் பார்த்திருக்கிறார்கள்.

எனவே உள்ளுணர்வு ஏதோ கூற, அந்த பாத் டப்பை திறந்து பார்க்கும்போது குளிப்பதற்காக சென்ற Ella உள்ளாடைகளுடன் தலை குப்புற அந்த பாத் டப்புக்குள் இறந்து கிடப்பதைக் கண்டு பிடித்திருக்கின்றனர்.

Ellaவுக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது, அதை அவர் மருந்துகளின் உதவியோடு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்.

பின்னர் அவரது நிலைமை சற்று மோசமாகி அடிக்கடி மயங்கி விழுந்திருக்கிறார். அப்படித்தான் அன்றும் குளிக்கச் சென்ற Ellaவுக்கு வலிப்பு வந்திருக்கிறது. பாத் டப்பிற்குள் தலை குப்புற விழுந்த Ellaவின் மூக்கில் தண்ணீர் ஏறி அவர் உயிரிழந்திருக்கிறார்.

பிரேத பரிசோதனை முடிவுகளும், வலிப்பினால் Ella பாத் டப்பில் விழுந்து, தண்ணீருக்குள் தலை குப்புற விழுந்ததால் சுவாசக் குழாயில் தண்ணீர் ஏறி அவர் உயிரிழந்ததையே உறுதி செய்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers