நடுவானில் பயணிகள் உயிருக்கு அச்சுறுத்தல்... துரிதமாக செயல்பட்ட விமானி: அவசரமாக தரையிறங்கிய விமானம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் அதன் கதவு ஒன்று திடீரென திறந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான கேலன்கள் எரிபொருளை கடலில் கொட்டியுள்ளனர்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புதனன்று இரவு சுமார் 9.35 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று பாங்காக் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், எச்சரிக்கை விளக்கு சுட்டிக்காட்டியுள்ளது, விமானத்தின் கதவு ஒன்று திறந்த நிலையில் உள்ளது என்று.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் ஹீத்ரோ விமான நிலையத்திற்கே திருப்பியுள்ளார்.

அதற்கு முன்னர் பாதுகாப்பு கருதி அந்த விமானத்தில் இருந்த சுமார் 60,000 பவுண்டுகள் மதிப்பிலான எரிபொருளை விமானி கடலில் கொட்டியுள்ளார்.

பின்னர் உரிய அனுமதி பெற்று அவசர அவசரமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

சம்பவத்தின்போது அந்த விமானத்தில் 344 பயணிகளும் 20 ஊழியர்களும் இருந்துள்ளனர்.

இதனிடையே குறித்த விமானத்தை பரிசோதித்த அதிகாரிகள், விமானத்தின் எச்சரிக்கை விளக்கில் ஏற்பட்ட கோளாறே இந்த பிரச்னைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

விமானம் 8000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த எச்சரிக்கை விளக்கு விமானியின் பார்வையில் பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 2 மணி நேர தாமதத்திற்கு பின்னர் அந்த விமானம் பாங்காக் புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்