கெட்ட ஆவிகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் சூனியக்காரிகளின் முத்திரைகள்: பிரித்தானியாவில் அபூர்வ கண்டுபிடிப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் நோய்களுக்கு காரணமாக இருப்பதாக கருதப்படும் கெட்ட ஆவிகளை ஊருக்குள் வர விடாமல் தடுப்பதற்காக இடப்பட்ட சூனியக்காரிகளின் முத்திரைகள் அடங்கிய குகைகளை தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Nottinghamshireக்கும் Derbyshireக்கும் இடையில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள குகைகளில் தொல் பொருள் ஆய்வாளர்கள் இந்த அடையாளங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒரு கால கட்டத்தில் கொள்ளை நோயாலும் பஞ்சத்தாலும் பந்தாடப்பட்ட பிரித்தானியாவில், பாதாளத்தில் இருந்து வரும் கெட்ட ஆவிகள் நோய், மரணம் மற்றும் பஞ்சம் ஆகியவற்றிற்கு காரணம் என கருதப்பட்டது.

அந்த ஆவிகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக பூமிக்கடியில் இருக்கும் சுண்ணாம்புக்கல் குகைகளில் இம்மாதிரியான சூனியக்காரிகளின் முத்திரைகள் என்னும் அடையாளங்கள் இடப்படுவது வழக்கம்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சூனியக்காரிகளின் முத்திரைகள் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய குகைகளிலேயே இதுதான் மிக அதிகமான சூனியக்காரிகளின் முத்திரைகள் இருக்கும் இடமாகும்.

இந்த அடையாளங்கள் கெட்ட ஆவிகளை ஒழிப்பதற்காகவும், அவை பாதாளத்திலிருந்து வெளிவராமல் இருப்பதற்காகவும் இடப்பட்டவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் இந்த குகைகளின் கண்டிபிடிப்பால் இந்த பகுதி திடீரென வரலாற்றியலாளர்களும் தொல் பொருள் ஆய்வாளர்களும் ஆய்வு செய்யும் பிரமாண்டமான, முக்கியத்துவம் மிகுந்த பகுதியாக மாறியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers