பிறந்தநாள் விழாவின் போது சிறுவனை குத்திக்கொலை செய்த மர்ம நபர்கள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் பிறந்த நாள் விழாவின் போது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 இளைஞர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு லண்டனில் கென்சிங்டன் பகுதியில் உள்ள ஒரு வாடகை பிளாட்டில் சிறுமி தன்னுடைய 16 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.

தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு, ஹாக்னீ பகுதிகளிலிருந்து விருந்தினர்களை அழைப்பதில் மட்டுமே சிறுமி கவனமாக இருந்தார்.

குறிப்பாக காம்டனில் இருந்து எந்த சிறுவர்களை அழைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். ஏனெனில் இரண்டு பகுதிகளை சேர்ந்த சிறுவர்களுக்கும் தகராறு இருப்பதை அந்த சிறுமி அறிந்திருந்தார்.

ஆனால் விழா நடைபெற்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த காம்டன் பகுதியை சேர்ந்த சில சிறுவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இதில் லூயிஸ் பிளாக்மேன் (19) என்கிற இளைஞர் 14 கத்திக்குத்து காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட, லாரன்ஸ் நன்குங்கு (7), பால் கிளாஸ்கோ, வார்விக் க்ரோவ் ஆகியோருக்கு குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் என ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

தியரி எடூஸி (16) என்கிற சிறுவனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. டெமரி வில்லியம்ஸ் (17) என்கிற சிறுவனுக்கு 20 ஆண்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், குற்றம் சுமத்தப்பட்ட 18 வயதுடைய மற்ற இரண்டு பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்