தவறுதலாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த பிரித்தானிய குடும்பம்...தாய் நாட்டுக்கு வரவிரும்புவதாக கண்ணீர்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவுக்கு சென்ற குடும்பம் அங்கு தவறுதலாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் தாங்கள் சேர்ந்துவிட்டதாகவும், மீண்டும் தாய் நாட்டுக்கு வரவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Manchester-ஐ சேர்ந்தவர் ஷபீனா அஸ்லாம் (29). இவரின் தாய் சபியா (51), தங்கை அலிரீசா சபர் (17) ஆகியோர் கடந்த 2014-ல் சிரியாவுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தனர்.

பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கேயே உள்ள நிலையில் பிரித்தானியாவுக்கு மீண்டும் வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஷபீனா கூறுகையில், எங்களை சுற்றுலாவுக்காக துருக்கிக்கு கூட்டி செல்வதாக என் உறவினர் கூறிய நிலையில் சிரியாவுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

அங்கு தவறுதலாக ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துவிட்டோம். எங்களின் சுதந்திரம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் இங்கு இழந்துவிட்டோம்.

மீண்டும் பிரித்தானியாவுக்கு வந்து சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

இன்னும் பிரித்தானியாவில் வசித்து வரும் ஷபீனாவின் தந்தை சபர் அஸ்லாம் கூறுகையில், இது தொடர்பாக நான் பொலிசாரிடம் நிறைய தடவை பேசிவிட்டேன்.

என்னை விட்டு என் குடும்பத்தார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சென்றுவிட்டார்கள். அவர்கள் தைரியமானவர்கள் எல்லாம் கிடையாது, மிகவும் மென்மையானவர்கள் தான்.

அவர்கள் ஐஸ் போன்ற இயக்கத்தில் விரும்பி சேர்ந்திருப்பார்கள் என நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்