லண்டன் சாலையில் சிதறி கிடந்த இரத்தம்: 3 பேருக்கு கத்திக்குத்து

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டன் சாலையில் 3 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டன் சாலையில் செயல்பட்டு வரும் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வெளியே மூன்று பேர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பில் தெரிவிக்கையில், தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் 24 வயதுடையவர்கள். ஆபத்தான காயங்கள் என்று சொல்லும் அளவிற்கு இல்லை. மத்திய லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்