சில வாரங்களில் தங்களுடைய குடும்பங்கள் பிரிய உள்ளதால் பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி பதட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய இளவரசர் ஹரி, கென்சிங்டன் அரண்மனையில் இருந்து பிரிந்து தன்னுடைய மனைவியுடன் ஃபிரோமோர் குடிசைக்கு செல்லவிருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் வெளியானது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரண்மனை நிர்வாகமும் இதனை உறுதி செய்து ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டது.
10 வருடங்கள் ஒன்றாக இருந்து வந்த சகோதரர்களுக்கு தற்போது அரச பொறுப்புகள் அதிகரித்துவிட்டதால் தனியாக பிரிந்து செல்கின்றனர்.
ஆனால் இதற்கு காரணாமாக சமீபத்திய மாதங்களில் வில்லியம்-கேட் மற்றும் ஹாரி-மேகன் ஆகிய ஜோடிகளுக்கு இடையே பல வேறுபாடுகள் இருந்ததாக இணையதளம் முழுவதும் புரளிகள் வலம்வந்தன.
தற்போது கர்ப்பிணியாக இருக்கும் மேகனுக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்கிடையில் இன்னும் சில வாரங்களில் தம்பதியினர் பிரிந்து செல்ல உள்ளனர் என செய்தி வெளியாகியிருக்கிறது. இதனால் இளவரசர்களும் சிறிது பதட்டம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.