லண்டனிலிருந்து தப்பி ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து கர்ப்பமான மாணவி: குழந்தை பெற்றெடுத்ததாக தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் இருந்து சிரியாவுக்கு தப்பி சென்ற பள்ளி மாணவி ஷமீமாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் கிரீன் அகாடமிக் பள்ளியில் கதீஷா சுல்தானா என்ற 16 வயது மாணவி பயின்று வந்தார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஆன்லைன் மூலம் மூளைச் சலவை செய்யப்பட்ட அவர் ஷமீமா பேகம் மற்றும் அமீரா அபேஸ் என்ற இரு பள்ளி தோழிகளுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவை விட்டு வெளியேறினார்.

பின்னர், இஸ்தான்பூல் வழியாக சென்ற அவர்கள் மூவரும் சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்தனர்.

இந்நிலையில் 19 வயதாகும் ஷமீமா சமீபத்தில் கூறுகையில், இங்கு வந்த நான் ஜிகாதி ஒருவரை திருமணம் செய்து கொண்டேன்.

திருமணம் முடிந்த 10 நாட்களிலே என்னுடைய கணவர் கைது செய்யப்பட்டு, டார்ச்சர் செய்யப்பட்டு இறந்தார்.

எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை ஒன்பது மாதத்திலும், மற்றொரு குழந்தை பிறந்த மூன்று மாதத்திலும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டனர்.

தற்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன், சாதரணவாழ்க்கை வாழ விரும்புவதால் பிரித்தானியாவுக்கே மீண்டும் வர விரும்புகிறேன் என கூறினார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஷமீமாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த அவர்களது அறிக்கையில், ஷமீமாவும் அவருக்கு பிறந்துள்ள குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர்.

இதுவரை ஷமீமாவுடன் நேரடி தொடர்பில் நாங்கள் இல்லை, விரைவில் அவருடன் தொடர்பு கொண்டு இது குறித்த கூடுதல் தகவல்களை பெறுவோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்