5 வருடங்களாக பயங்கரவாத இயக்கத்தில் சிக்கியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: கண்ணீர் மல்க கூறிய வார்த்தை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

துருக்கி செல்வதாக நினைத்து சிரியாவில் பயங்கவாதிகளிடம் சிக்கியிருக்கும் பிரித்தானிய குடும்பம் மீண்டும் நாடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த ஷபினா அஸ்லம் (29) அவரது தாய் சாஃபி ஜெயனாப் (51) மற்றும் அவருடைய தங்கை அலீராசா சபர் (17) ஆகியோர், சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியிருக்கும் ஷபினா, 2014-ம் ஆண்டு நாங்கள் சுற்றுலாவிற்காக புறப்பட்டோம்.

துருக்கி என்று கூறி தான் உறவினர்கள் அழைத்து சென்றார்கள். ஆனால் நாங்கள் சிரியாவிற்கு தான் செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியாது.

சுற்றுலா என்று தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எல்லோரும் எங்களுடைய மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றை இழந்து பயத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

இங்கிலாந்திற்கு எங்களுடைய குடும்பத்துடன் மீண்டும் திரும்ப விரும்புகிறோம். என் குழந்தைகள் ஒரு சாதாரண வாழ்க்கை வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஜெய்னாப் கணவர், சபர் அஸ்லம், இன்னமும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். பலமுறை அவர் பொலிசாரிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், என்னுடைய குடும்பத்தார்கள் துணிச்சலானவர்கள் அல்ல, அவர்கள் மிகவும் மென்மையானவர்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற ஏதேனும் ஒன்றில் சேர்ந்திருப்பார்கள் என்பதை நான் நம்பவில்லை எனவும் தெரிவித்துளளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்