தினசரி 20 மணி நேர வேலை... பலமுறை பாலியல் துஸ்பிரயோகம்: லண்டனில் கொத்தடிமையான பெண்ணின் கண்ணீர் கதை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கானாவில் இருந்து வீட்டு வேலைக்காக லண்டன் நகருக்கு அழைத்து வரப்பட்ட இளம்பெண் அந்த குடும்பத்தினரால் கொத்தடிமையாக மாற்றப்பட்ட கண்ணீர் கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவில் பிறந்தவர் ஆமி. தனது 18 வயதில் பெற்றோர் மரணமடைந்த நிலையில், லண்டனில் வீட்டு வேலைக்காக மேரி என்பவரால் அழைத்து வரப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்த ஆமி அதன்பின்னர் மேரியின் கொத்தடிமையாக மாறியுள்ளார்.

ஆமியை அவர் வெறு தரையில் இரவு படுக்க வைத்துள்ளார். மட்டுமின்றி லண்டனுக்கு வந்த சில வாரங்களிலேயே ஆமியை தினசரி 20 மணி நேரம் வேலை வாங்கியுள்ளார்.

பல நாட்கள் ஒருவேளை உணவு மட்டுமே ஆமிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆமி தூங்குவதை மேரி எப்போதும் அனுமதிக்கவில்லை.

இதனிடையே வெளியாட்களின் வீட்டு வேலைக்கும் ஆமியை மேரி அனுப்பி வைத்துள்ளார். சில மாதங்கள் கடந்த நிலையில், ஆமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் மேரி.

வாரத்தில் இருமுறை ஆமியை பயன்படுத்தி மேரி பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். மட்டுமின்றி ஆமியுடன் உறவில் ஈடுபடும் ஆண்களிடம் பேசுவதை மேரி தடை செய்திருந்தார்.

சுமார் 18 மாதங்கள் கடந்த நிலையில், மேரி வெளியே சென்றிருந்த ஒருநாள் ஆமி அங்கிருந்து தப்பியுள்ளார்.

தங்குவதற்கு வேறு இடம் ஏதும் இல்லை என்பதால் லண்டன் தெருவிலேயே ஆமி அந்தி உறங்கியுள்ளார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு பின்னர், மேரி ஒருநாள் ஆமியை தெருவில் வைத்து காண நேர்ந்துள்ளது.

உடனையே பொலிசாருக்கு தகவல் அளித்த அவர், ஆமியை சிக்க வைத்துள்ளார். தற்போது தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஆமி Midlands பகுதியில் குடியிருந்து வருகிறார்.

பிரித்தானியாவில் மட்டும் சுமார் 136,000 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் 7,000 பேர் இதில் இருந்து தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்