பிரித்தானியாவில் பிரெக்சிட் விவகாரத்தில் அதிருப்தி.. 7 அமைச்சர்கள் திடீர் விலகல்!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரெக்சிட் உள்ளிட்ட விவகாரங்களில் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த தொழிலாளர் கட்சி அமைச்சர்கள் 7 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர்.

மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானிய முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்சிட்’ நடவடிக்கையை, அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் பிரதமர் தெரசா மே செய்து முடிக்க வேண்டும்.

இதற்கு காரணம், ஐரோப்பிய கூட்டமைப்புடன் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்ததுடன், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவையும் புறக்கணித்தது. இதனால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் தெரசா மே உள்ளார்.

இந்நிலையில், பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தங்கள் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.

அத்துடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும், இனி தனி அணியாக செயல்பட உள்ளதாகவும் அந்த கட்சியின் 7 அமைச்சர்கள் தெரிவித்தனர். அதன்படி, நேற்றைய தினம் திடீரென அவர்கள் கட்சியில் இருந்து விலகினர்.

இவர்கள் தனிக்கட்சி எதுவும் இதுவரை தொடங்கவில்லை. ஆனால், தொழிலாளர் கட்சி மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் கட்சியில் இருந்து மேலும் சில அமைச்சர்கள் வெளியேறலாம் என தெரிகிறது. முக்கிய அமைச்சர்கள் விலகியிருப்பது தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers