தனது தம்பியுடன் உறங்கிய மனைவி: கண்ணால் பார்த்த கணவன்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் மனைவியுடன் தனது சொந்த தம்பி தனிமையில் இருந்ததை பார்த்த கணவர் தம்பியை கொலை செய்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

பாட்லி நகரை சேர்ந்தவர் இப்ராஹிம் மஹிடர் (35). இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

இப்ராஹிமின் தம்பி நசீர் மஹிடர் (31) தனது மனைவி அஷ்மா தஜித்துடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி நசீர் வீட்டுக்கு சென்ற இப்ராஹிம் அவரை கத்தியால் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதை தடுக்க முயன்ற நசீர் மனைவி அஷ்மாவையும் இப்ராஹிம் அடித்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் இப்ராஹிமை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது மனைவியுடன், நசீர் தவறான தொடர்பில் இருந்ததாகவும், இருவரும் ஒன்றாக உறங்கியதை பார்த்ததாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் தம்பியை கொன்றதாக கூறியதாக தெரிகிறது.

இதனிடையில் அவர் மீதான நீதிமன்ற வழக்கு விசாரணை தொடங்கியது.

இதில் உயிரிழந்த நசீரின் மனைவி அஷ்மா வாக்குமூலம் அளித்தார்.

அவர் கூறுகையில், என் கணவருக்கும், தனது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக இப்ராஹிம் என்னிடம் அடிக்கடி கூறிவந்த நிலையில் அதை நான் நம்பவில்லை.

பின்னர் தன்னிடம் இது குறித்த ஆடியோ ஆதாரம் இருப்பதாக அவர் கூறினார், ஆனால் என்னிடம் அதை காட்டவில்லை.

இந்நிலையில் எங்கள் வீட்டுக்கு ஆக்ரோஷமாக வந்த இப்ராஹிம், நசீரை கொலை செய்ததோடு, என்னையும் காயப்படுத்தினார் என கூறியுள்ளார்.

இருதரப்பும் வெவ்வேறு விதமாக பேசுவதால் வரவிருக்கும் நீதிமன்ற விசாரணைகளில் சம்பவம் குறித்த முழு உண்மைகள் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers