இளவரசி மேகனுக்கு வளைகாப்பு: வண்ண ரோஜாக்களால் விழாக்கோலம் பூண்ட ஹோட்டல்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இளவரசி மேகனின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக நியூயார்க்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லொறி நிறைய ரோஜாப்பூக்கள் வந்திறங்கியுள்ளன.

கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மேகன், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய முதல் குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.

அவருடைய கணவர் ஹரி மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த பலரும் இதனை எதிர்ப்பார்த்து அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தி மார்க் ஹோட்டலில் இளவரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு இரவு மட்டும் தங்குவதற்கு இந்த ஹோட்டலில் £620முதல் £4,000 வரை வசூல் செய்யப்படுகிறது. உள்ளூரை சேர்ந்த தனக்கு நெருக்கமான 15 நண்பர்களை மேகன் இந்த நிகழ்விற்கு அழைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 2 லொறிகளில் ரோஜாக்கள் மற்றும் குழந்தைக்கான ஆடைகள் வந்திறங்கியுள்ளன. அதனை ஹோட்டலில் வேலை செய்யும் பெண்கள் எடுத்துச்செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers