16 வயது சிறுமியுடன் ஓடி போய் அவரையே திருமணம் செய்த 44 வயது கணவன்: கதறி துடித்த மனைவி

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸில் 16 வயது சிறுமியுடன், ஏற்கனவே திருமணமான 44 வயது நபர் ஒடி போன நிலையில் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதோடு தற்போது இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆண்டி டெல்பார்ட் (48) என்பவர் தனது மனைவி சம்மி மார்ஷல் (36) மற்றும் 6 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

டெல்பார்ட் மற்றும் சம்மி ஆகிய இருவருக்குமே ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அதன் மூலம் குழந்தைகள் இருந்தனர்.

பின்னர் இருவரும் 2010-ல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் பெத் (16) என்ற சிறுமி ஆண்டி வீட்டில் வந்து தங்கிய நிலையில் தம்பதியின் குழந்தைகளை கவனித்து வந்தார்.

இதனிடையில், ஆண்டிக்கும் சிறுமி பெத்துக்கும் கடந்த 2014-ல் காதல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியுடன் அப்போது 44 வயதில் இருந்த ஆண்டி வீட்டை விட்டு ஓடிபோயுள்ளனர்.

இதனையறிந்த சம்மி துடித்து போனார். பின்னர் மீண்டும் ஆண்டியும், பெத்தும் வீட்டுக்கு வந்த நிலையில் தாங்கள் இருவரும் வாழ்வதற்காக இந்த வீடு வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் தன்னை நம்பி தன்னுடைய பிள்ளைகள் இருப்பதால் வீட்டை விட்டு போக முடியாது என சம்மி கூறிவிட்டார்.

இதையடுத்து இருவரும் வெளியில் சென்று வேறுவீட்டில் தங்கி கொண்டனர். இதன் பின்னர் கடந்த 2016-ல் ஆண்டியும் பெத்தும் திருமணம் செய்து கொண்டனர்.

பெத்துக்கு 2016-ல் 18 வயதான நிலையில் தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இது குறித்து ஆண்டி கூறுகையில், எங்களின் திருமண வாழ்க்கை நன்றாக உள்ளது, வயது வித்தியாசம் குறித்து கவலையில்லை என கூறியுள்ளார்.

கணவரின் துரோகத்தால் துடித்து போன சம்மி கூறுகையில், ஆண்டிக்கும் பெத்துக்கும் தொடர்பு இருப்பதை என் மகன் மூலம் நான் கண்டுப்பிடித்தேன். ஆனால் இருவரும் அதை முதலில் மறுத்து பின்னர் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். நான் ஆண்டியை நேர்மையானவர் என நினைத்தேன், ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை.

ஆண்டியின் முன்னாள் மனைவி என்னிடம் அவர் குறித்து எச்சரித்தார், ஆனால் நான் தான் அதை நம்பவில்லை.

பின்னர் தான் ஆண்டியின் சுயரூபம் எனக்கு தெரிந்தது.

சம்பவத்துக்கு பின்னர் நான் ஆண்டியை பார்க்கவேயில்லை, அவரை நான் மிஸ் செய்வதாக நினைக்கவில்லை.

ஒருநாள் பெத்தை அவர் விட்டு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers