இலங்கை வம்சாவளி இசை மேதையை காதலிக்கும் பிரித்தானிய பிரபலம்! வெளியான புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய தொலைக்காட்சி பிரபலமான Richard Osman (48), இலங்கை வம்சாவளியினரான Sumudu Jayatilakaவை (39) காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்வதுபோல் இருவரும் சேர்ந்து காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை வம்சாவளியினரான Jayatilaka, ஒரு இசை மேதை. பியானோ, வயலின், கிட்டார், புல்லாங்குழல் மற்றும் அக்கார்டின் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் கொண்ட Jayatilaka, பிரித்தானிய மகாராணியின் முன் பாட தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

பாடகரும் பாடல் ஆசிரியருமான Jayatilakaவின் காதலரான தொலைக்காட்சி பிரபலமான Osman 6 அடி 7 இன்ச் உயரம் உடையவர். Jayatilakaவோ 5 அடி 2 இன்ச் உயரமுடையவர்.

எப்போதும் எல்லோரும் தன்னை அண்ணாந்து பார்ப்பதாக வேடிக்கையாக கூறும் Osman, தன் காதலியும் தன்னை அண்ணாந்துதான் பார்க்கிறார் என்றாலும் தங்களுக்குள் உயரம் ஒரு பிரச்சினையே இல்லை என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்