மேகன், உன் வயிற்றில் வளரும் குழந்தை என்னுடையதா? அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளவரசர் ஹரியின் கேள்வி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் மொராக்கோ நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தனது மனைவியைப் பார்த்து ஹரி கேட்ட ஒரு கேள்வியால் அனைவரும் ஒரு கணம் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

ஆசிரியை ஒருவர், தாயாகப் போகும் மேகனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்க, அப்படியா நீ கர்ப்பமாயிருக்கிறாயா என்பது போல் போலி அதிர்ச்சியுடன் ஹரி மேகனை திரும்பிப் பார்க்க, அவரோ சர்ப்ரைஸ்! என்கிறார்.

என் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று போலியாக ஆச்சரியப்படும் ஹரி, அடுத்ததாக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார்.

மேகன், உன் வயிற்றில் வளரும் குழந்தை என்னுடையதா? என்று அவர் கேட்க, நல்ல வேளையாக மேகன் அவரை உதைக்கவில்லை.

அனைவரும் அவரைப்போலவே ஹரியின் கேள்வியை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு சிரிக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்