இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை: இது குறித்து பிரித்தானியா கூறியது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்சனை நடைபெற்று வரும் நிலையில் இது தொடர்பாக பிரித்தானியா கருத்து தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து போர் நிறுத்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியா, இந்தியாவும், பாகிஸ்தானும் இவ்விவகாரத்தில் சமாதான தீர்வை எட்டவேண்டும் என தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் வெளியுறவு செயலர் ஜெரிமி ஹண்ட் இது தொடர்பாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெமூத் குரேஷியுடன் தொலைபேசியில் பேசியதாக பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அப்போது தீவிரவாதத்தால் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜெரிமி அவர்களிடம் கவலை தெரிவித்ததாக தெரிகிறது.

மேலும், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை ஏற்படுத்தி கொண்டு சமாதான தீர்வை கண்டால் அது இரண்டு பகுதிகளிலும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதோடு புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஜெரிமி கண்டனம் தெரிவித்ததோடு அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்