இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் சுற்றுலா சென்ற இடத்தில் சிக்கித்தவிக்கும் பிரித்தானியர்கள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், சுற்றுலா சென்ற 100க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் தாய்லாந்தில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

கடந்த 14-ம் திகதி காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்தே இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகி வருகிறது.

பயங்கரவாதிகளை கூண்டோடு அழிக்கும் நோக்கில் இந்தியா ஒருபுறம் செயல்பட, எல்லைமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தான் ஒருபுறம் செயல்பட நடுவில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருநாட்டு பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இரு நாடுகளும் போர் புரியும் எண்ணத்தினை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அடுத்தது இருநாட்டு போர் விமானங்களும் எல்லை மீறி பறந்ததால் இன்னும் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதிரடி முடிவாக போர் விமானங்களை தவிர எந்த விமானங்களும் வானத்தில் பறக்க கூடாது என இரு நாட்டிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டன.

இதன் காரணமாக தாய் ஏர்வேஸ் விமானம் தங்களுடைய அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. சுவார்னாபூமி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு சில விமானங்களையும் உடனடியாக திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அங்கு சுற்றுலா சென்ற 100க்கும் அதிகமான பிரித்தானியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வான் வழியானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியில் செல்வதாலே சேவை நிறுத்தப்பட்டதாக விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த சுற்றுலா பயணிகள் பலரும், தங்களுடைய மனக்குமுறல்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...