புற்றுநோயால் நாட்களை எண்ணும் பிரித்தானிய சிறுவன்... கண்ணீரில் பெற்றோர்: உதவிக்கரம் நீட்டிய 4,200 பேர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் புற்றுநோயால் உயிருக்கு போராடும் 5 வயது சிறுவனினுக்கு உதவ 4,200 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் வர்செஸ்டர் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் 5 வயதான ஆஸ்கார் லீ.

இவருக்கு உடலில் ஏற்பட்ட சாதாரண சிராய்ப்பு பின்னர் உயிரைக் கொல்லும் புற்றுநோயாக மாறியுள்ளது.

தற்போது ஸ்டெம் செல் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறுவன் ஆஸ்கார், மருத்துவர்களால் 3 மாதம் மட்டுமே உயிருடன் இருப்பார் என நாள் குறித்துள்ளனர்.

இதுவரை 20 முறை ஆஸ்கார்ருக்கு ரத்தம் மாறும் சிகிச்சை நடைபெற்றுள்ளது. கடந்த 4 வாரமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி ஆஸ்காரின் நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது பெற்றோரான ஒலீவியா மற்றும் ஜாமி லீ ஆகியோர் தங்களது மகனுக்கு உதவ வேண்டும் என பொதுமக்களிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது வரை சுமார் 4,200 பேர் சிறுவன் ஆஸ்காரின் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இருந்து உரிய நபரை தெரிவு செய்து ஸ்டெம் செல் மாற்று அறுவைசிகிச்சை நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்