குழந்தைக்கு டயானா என்று பெயரிடும் ஹரி மேகன் தம்பதியர்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிரசவமாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஹரி - மேகன் தம்பதியர் தங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு டயானா என பெயர் வைக்கலாம் என பணம் வைத்து பந்தயம் கட்டும் வேலை தொடங்கி விட்டது.

தனது தாயை கௌரவிக்கும் வகையில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் ஹரி அதற்கு டயானா என பெயர் வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாகவே பிரித்தானிய மக்கள் மத்தியில் காணப்படுகிரது.

இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் குழந்தையின் பாலினத்தை வெளியிடும் முன்னரே, பந்தயம் கட்டுவோர் பந்தயம் கட்ட தொடங்கி விட்டனர்.

இது தவிர பெண் குழந்தை பிறந்தால் ஆலிஸ் அல்லது விக்டோரியா என்றும், ஆண் குழந்தை பிறந்தால், ஆர்தர் அல்லது எட்வர்ட் என்றும் பெயரிட வாய்ப்புள்ளதாகவும் மக்கள் கருதுகின்றனர்.

இளவரசர் வில்லியமும் அவர் மனைவி கேட்டும்கூட, தங்கள் மகள் சார்லட் பெயரில் டயானா என்ற பெயரையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பிரித்தானியர்களின் ஃபேவரைட்டான, குட்டி இளவரசி சார்லட்டின் முழுப்பெயர் சார்லட் எலிசபெத் டயானா!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்