ஷமீமா எந்நேரமும் பிரித்தானியாவுக்குள் நுழையலாம்? குற்றவியல் நிபுணர் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அகதிகள் முகாமிலிருந்து இரவோடு இரவாக தப்பிய ஷமீமா, எந்நேரமும் பிரித்தானியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக தீவிரவாத மற்றும் குற்றவியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஈராக் எல்லையிலுள்ள al-Hawl அகதிகள் முகாமிலிருந்து தனது மகனுடன் தலைமறைவான ஷமீமா பேகம் (19) பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு இன்னும் கொஞ்சம் தூரம்தான் இருப்பதாக David Otto என்னும் தீவிரவாத மற்றும் குற்றவியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாதிலுள்ள பிரித்தானிய தூதரகம் ஒன்றை அணுகி ஷமீமா பிரித்தானியாவுக்கு வர முயற்சி செய்யலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ஷமீமாவின் பிரித்தானிய குடியுரிமையைப் பறித்ததைத் தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து உடனடியாக பிரித்தானிய தரப்பிலிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்றாலும், ஷமீமாவின் மகனை ஏற்றுக் கொள்வது மற்றும் கவனித்துக் கொள்வது தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் அக்கறை தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

உள்துறை செயலர் ஜாவித்தும், ஷமீமாவில் குடியுரிமை பறிக்கப்பட்டாலும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள்தான் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டும், குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தார்.

பெற்றோர் பிரித்தானிய குடியுரிமையை இழந்தாலும், அது அவர்களது குழந்தையின் உரிமைகளை பாதிக்கக்கூடாது என்றும் ஜாவித் தெரிவித்திருந்தார்.

15 வயது இருக்கும்போது, ஐ. எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலுள்ள தனது வீட்டிலிருந்து சிரியாவுக்கு தப்பியோடினார் ஷமீமா.

ஷமீமா, சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதியாகிய யாகோ ரீட்ஜிக்கை திருமணம் செய்து கொண்டதும், அவரது மூன்று குழந்தைகளுக்கு தாயானதும், மீண்டும் அவர் தனது குழந்தைக்காக பிரித்தானியா வர விருப்பம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்