தனது திருமணத்துக்கு லட்சங்களில் செலவு செய்த மணப்பெண்... மணமகனை தேடிய போது பலருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து புத்தாடைகள் அணிந்து திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண் போல காட்சியளித்த பெண்ணுக்கு மணமகனே இன்னும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

தெரசா மஹோன் என்ற பெண் இரு தினங்களுக்கு முன்னர் மணப்பெண் போல புத்தாடை அணிந்து தான் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்தார்.

மேலும் இந்த திருமணத்துக்காக €1,750 செலவு செய்தார் தெரசா.

ஆனால் திருமணத்துக்கான நேரம் வந்தபோது தான் அவருக்கு மணமகனே இன்னும் கிடைக்கவில்லை என தெரிந்தது.

இப்படியொரு விசித்தர செயலை செய்த தெரசாவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெரசா கூறுகையில், எனக்கு மணமகன் இன்னும் கிடைக்கவில்லை என்பது உண்மை தான்.

இப்போதே நான் திருமணத்துக்கு தயாரானால் தான் வருங்காலத்தில் உண்மையில் திருமணம் நடக்கும் போது அது எனக்கு எளிதாக இருக்கும்.

சின்ட்ரல்லா என்ற திரைப்பட கதாபாத்திரம் எனக்கு அதிகம் பிடிக்கும். அதன் தாக்கத்தில் தான் இந்த உடையை தயார் செய்தேன்.

எனக்கு 10 வயதிலிருந்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை உள்ளது. ஒரு நபரை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் வந்த நிலையில் அது முடியாமல் போனது.

என்றாவது ஒருநாள் எனக்கான இளவரசனை நான் திருமணம் செய்து கொள்வேன்.

அவரை நான் கண்டுப்பிடிக்கும் போது என் கனவு திருமணத்துக்கான மொத்த திட்டத்தையும் கூறுவேன். ஓலீ முர்ஸ் என்ற பாடகர் கூட என் கனவு நாயகன் தான் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்