பயங்கரவாதிக்கும் பிரித்தானிய மாணவிக்கும் பிறந்த மூன்றாவது குழந்தையும் இறந்துவிட்டதாக அறிவிப்பு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து தப்பியோடிய ஷமீமாவிற்கு, சில வாரங்களுக்கு முன்பு பிறந்த மூன்றாவது குழந்தையும் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2015-ம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து மூன்று சிறுமிகளுடன் சிரியாவிற்கு தப்பியோடிய ஷமீமா, அங்கு 23 வயதான யாகோ ரிட்ஜ் என்கிற பயங்கரவாதியை சந்தித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், 3 வாரங்களுக்கு முன்பு ஜெரா என்கிற குழந்தை பிறந்தது.

நெதர்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக ஷமீமாவின் கணவன் யாகோ 6 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளான். தன்னுடைய குழந்தை மட்டுமே தனக்கு உலகம் எனக்கூறிய ஷமீமா, பிரித்தானியாவிற்கு வரவிரும்புவதாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய குடியுரிமையை ரத்து செய்த உள்துறை செயலர் ஜாவித், ஷமீமா பாதிக்கப்பட்டாலும், அவருடைய குழந்தை பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷமீமா அகதிகள் முகாமில் இருந்து தப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவருடைய வழக்கறிஞர் முகம்மது டி அகஞ்சி, "ஷமீமாவின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது குழந்தை இறந்தவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் வந்துள்ளன. அந்த குழந்தை ஒரு பிரித்தானிய குடிமகன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் சிரிய ஜனநாயக படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஷமீமா மற்றும் அவருடைய குழந்தை உயிருடன் தான் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்